இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் மாகாணங்களை மறுசீரமைப்பு செய்யும் முன்மொழிவுக்கு எதிராக கடுமையான எதிர்ப்புக்கள் எழுந்துள்ளன. சிந்து மாகாணத்தை பிரிக்க மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து கராச்சியில் மாபெரும் எதிர்ப்பு பேரணி நடைபெற்றது.
வழக்கறிஞர்கள், சிவில் உரிமை ஆர்வலர்கள், பொது மக்கள் அனைவரும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். சிந்துவின் வரலாற்று மற்றும் கலாச்சார அடையாளத்தை பாதிக்கும் முடிவுகளைத் தடுக்கப் போவதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் எச்சரித்தனர்.






