
கேரளாவில் இருந்து நாட்டு அரசியலில் மாற்றம்.. ராகுலை பிரதமராக பார்ப்பதே எனது இலக்கு: முதல்வர் ரேவந்த் ரெட்டி
கேரள மாநிலம், நிலம்பூரில் உள்ள மதிப்புமிக்க ஆர்யாடன் முஹம்மது 2026 விருதை பெற்ற தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி முக்கிய கருத்துக்களை தெரிவித்தார். நாட்டில் இளைஞர்களின் எதிர்காலத்தை சீர்குலைக்கும் சதிகள் நடப்பதாகவும், வாக்களிக்கும் உரிமையையும் ஜனநாயகத்தையும் பாதுகாப்பது அனைவரினதும் பொறுப்பு எனவும் அவர் தெளிவுபடுத்தினார்.

