'ஹனுமான்' படத்தின் தொடர்ச்சியாக 'அனுமான் 2' படத்தை உருவாக்குவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாக அந்த இதழில் வெளியான கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் விஷ்ணு தேஜ் கதாநாயகனாக நடிக்க, வி.வி. ஆனந்த் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தெலுங்கு மட்டுமின்றி இந்தி, தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் இப்படம் உருவாகிறது என்று அந்தக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பெரிய பட்ஜெட் படத்தின் ப்ரீ புரொடக்ஷன் பணிகள், மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப விவரங்களை படக்குழு விரைவில் வெளியிடவுள்ளது.






