சுங்க அதிகாரிகள் மற்றும் கூரியர் நிறுவனங்கள் என்ற பெயரில் சைபர் குற்றவாளிகள் மக்களை குறிவைத்து தாக்குதல் நடத்துவதாக அந்த கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டில் இருந்து பார்சல் வந்துள்ளதாகவும், அதில் தங்கம் அல்லது மற்ற மதிப்புள்ள பொருட்கள் இருப்பதாக கூறி பாதிக்கப்பட்டவர்களை பயமுறுத்துவதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
அதன் பிறகு, சுங்க அனுமதி, அபராதம் அல்லது வழக்கில் இருந்து தப்பிக்க பணம் செலுத்துமாறு குற்றவாளிகள் வற்புறுத்துகின்றனர்.