ஐதராபாத்தை சர்வதேச தரத்துடன் மேம்படுத்த அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. நகரின் விரிவாக்கம், உள்கட்டமைப்பு, முதலீடுகள் மற்றும் வேலை வாய்ப்புகளை கருத்தில் கொண்டு நீண்ட கால திட்டங்கள் செயல்படுத்தப்படும் என அமைச்சர் ஸ்ரீதர் பாபு தெரிவித்தார்.

ஹைதராபாத்தை நீல நகரமாகவும், பசுமை நகரமாகவும் மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார். உலகத் தரம் வாய்ந்த நகரங்களுடன் போட்டியிடும் நிலைக்கு நகரத்தை கொண்டு செல்வதுடன், முதலீடுகளை ஈர்க்கும் வகையில் உள்கட்டமைப்பு மேம்படுத்தப்படும், என்றார்.