தெலுங்கானாவில் ஆட்சிக்கு வருவதே பாஜகவின் நோக்கம் என அக்கட்சியின் மாநில தலைவர் ராமச்சந்திர ராவ் தெரிவித்துள்ளார்.

ஆட்சிக்கு வருவதற்கு யாருடனும் கூட்டணி தேவையில்லை என்றும் தனித்து போராடி சாதிப்பேன் என்றார்.

மத்திய அமைச்சர்கள் கிஷன் ரெட்டி, பாண்டி சஞ்சய் ஆகியோருடன் கட்சியின் தேசியத் தலைவர் நிதின் நபீனை அவர் சந்தித்துப் பேசினார். நிறுவன விரிவாக்கம் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.