மகேஷ் பாபு - ராஜமௌலி கூட்டணியில் சர்வதேச அளவில் உருவாகி வரும் 'வாரணாசி' படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. வழக்கமான சாகசப் படங்களைப் போல் இல்லாமல் காட்சியமைப்பு மற்றும் உலகைக் கட்டமைப்பதில் கவனம் செலுத்தியிருக்கிறார் ராஜமௌலி. இதன் ஒரு கட்டமாக கதையின் பின்னணிக்கு ஏற்ப பிரத்யேக மொழி மற்றும் வசனம் வடிவமைக்கப்பட்டுள்ளது என்ற செய்தி திரையுலக வட்டாரத்தில் தீவிர ஆர்வத்தை ஏற்படுத்தி வருகிறது.