ஐதராபாத்: நவீன தொழில்நுட்ப பயன்பாட்டில் தெலுங்கானா காவல் துறை மேலும் ஒரு படி முன்னேறியுள்ளது. குற்றப் புலனாய்வுத் துறை (சிஐடி) வடிவமைத்த 7 அதிநவீன தொழில்நுட்பச் சேவைகளை டிஜிபி அலுவலகத்தில் டிஜிபி சிவி ஆனந்த் தொடங்கி வைத்தார். இவற்றில் முதன்மையானது 'குடிமக்கள் கருத்து மையம்', இது மனுக்கள், எஃப்ஐஆர்கள், இ-சலான்கள் மற்றும் பாஸ்போர்ட் சரிபார்ப்பு சேவைகள் பற்றிய பொதுமக்களின் கருத்துக்களை பதிவு செய்கிறது. பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக, மாநிலம் முழுவதும் 35 பரோசா கேந்திராக்கள் ஒரே டிஜிட்டல் தளத்தில் கொண்டு வரப்பட்டுள்ளன. மேலும், என்ஐசி இ-சிறைகள் அமைப்பை சிசிடிஎன்எஸ் உடன் இணைத்து வடிவமைக்கப்பட்ட 'ஜெயில் ரிலீஸ் மானிட்டரிங் சிஸ்டம்' மூலம், கைதிகளின் விடுதலை விவரம் அந்தந்த நிலையங்களுக்கு உடனடியாக சென்றடையும். மேலும் 9.8 லட்சம் பதிவுகளைக் கொண்ட ஃபேஸ் சர்ச் செயலி மூலம் 15 வினாடிகளில் சந்தேக நபர்களின் முகத்தை அடையாளம் காண முடியும் என்று டிஜிபி விளக்கமளித்துள்ளார்.